/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 17, 2024 08:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, அரிமா சங்கம், கேர்-டி அமைப்பு சார்பில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. அரிமா சங்க அரங்கில் நடந்த வகுப்பில் திட்ட மேலாளர் மோத்திராஜ் தலைமை வகித்தார்.
வக்கீல் ஆர்த்தி கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள், போக்சோ சட்டம், குறித்தும் விளக்கி பேசினார். சமூக நலம், மருத்துவப் பணிகள், கல்வி, சட்டப் பணிகள் துறை சார்ந்தவர்கள் பங்கேற்றனர். பயிற்சியில் கேர்-டி தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.