/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திரையுலகில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: நடிகை பீனா
/
திரையுலகில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: நடிகை பீனா
திரையுலகில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: நடிகை பீனா
திரையுலகில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: நடிகை பீனா
ADDED : ஆக 22, 2024 02:24 AM
பாலக்காடு : ''திரையுலகில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,'' என, நடப்பாண்டு சிறந்த திரைப்பட நடிகைக்கான கேரள மாநில அரசின் விருது பெற்ற பீனா தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் இந்த ஆண்டு சிறந்த திரைப்பட நடிகைக்கான விருது பெற்ற பீனா, நிருபர்களிடம் கூறியதாவது:
ஆசிரியையான நான், கற்பித்தலையும், நாடகத்தையும் கைவிட்டு திரை உலகிற்கு செல்ல மாட்டேன். நீண்ட காலமாக நாடகத்தில் நடித்து வரும் எனக்கு இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆசிரியை பணி உள்ளது. இவை இரண்டையும் கைவிட்டு சினிமா உலகத்துக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
'கடவு' என்ற படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு, சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
கடும் சவால்களை எதிர்கொண்டு வாழ்க்கை பயணம் செய்யும் இத்திரைப்படத்தின் கீதா கதாபாத்திரத்தில், நடிப்பதற்காக ஒரு மாதம் காலம் ஒத்திகை பார்த்தேன். கதாபாத்திரத்தை பயத்துடன் தான் அணுகினேன்.
வாய்ப்பு கிடைத்தால் நல்ல கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களில் நடிப்பேன்.
கலை மதிப்புள்ள படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
தற்போது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறுவது போல், மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.