/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பெண்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்க வேண்டும்'
/
'பெண்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்க வேண்டும்'
ADDED : ஆக 24, 2024 11:03 PM
கோவை:கோவை, நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் பாரா பெண்கள் பாதுகாப்பு கவுன்சில்(பி.டபிள்யு.பி.சி.,) தேசிய பாரா த்ரோபால் அமைப்பு, ரோட்டரி கிளப் கோவை டவுன்டவுன் சார்பில், 'ஷெரோஸ் பெஸ்ட் - 2024' எனும், சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.
பெண்ணுரிமைக்குரல், பெண்ணாற்றல், பெண் சமத்துவம், பெண் பாதுகாப்பு, பெண் ஆளுமை ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
சேவா ஜெனவாவின் நிறுவனர் நிர்மலா ராவட் பேசுகையில், ''அனைத்து பெண்களும் தங்களது கோரிக்கைகளை, வலுவாக தெரிவிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு முக்கியம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேம்படுத்துவது அவசியம். பெண்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் வளர முடியும்,'' என்றார்.
நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் தலைமை வகித்தனர். பி.டபிள்யு.பி.சி., பொதுச்செயலர் திவ்யா, தேசிய பாரா ஒலிம்பிக் குழுவின் தொழில்நுட்ப பிரதிநிதி ஷோன் ஷோக்லிப், கோவை உமன் சென்டர் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மிருதுபாஷினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில், மலேசியா, கம்போடியா, சிம்பாப்வே, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

