/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் குழு கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்
/
மகளிர் குழு கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 20, 2024 10:15 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆண்டிபாளையம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. நிர்வாகி விஜயா வரவேற்றார். இதில், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, தலைவர் சாந்தி, செயலாளர் ரத்தினம், பொருளாளர் மீனாட்சி, இணை செயலாளர் சுந்தரி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் - 7 பேர், என மொத்தம், 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், ஆண்டிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து எடுத்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, மாதவிடாய் சுகாதாரம், பள்ளியில் குழு அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சித்ரா நன்றி கூறினார்.

