ADDED : மே 18, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
நெகமம்: வடசித்தூர் அருகே, தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியானார்.
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 35, வெல்டர். இவர், நெகமம் அருகே உள்ள வடசித்தூரில் இருக்கும் தனியார் கோழிப்பண்ணையில், செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, இரும்பு கம்பியை எடுக்கும் போது தவறுதலாக மின் ஒயர்களில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
