ADDED : மே 11, 2026 06:22 PM
வால்பாறை: வால்பாறை, ேஷக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பதுங்கும் சிறுத்தையை கண்டு தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மனாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் பகல் நேரத்திலேயே வெளியே உலா வரத்துவங்கியுள்ளன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ேஷக்கல்முடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை பதுங்கியிருப்பதை நேரில் கண்ட தொழிலாளர்கள் பீதியடைந்தனர். மாலை நேரங்களில் இந்த பகுதியில் சிறுத்தை அடிக்கடி நடமாடுவதால், தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடக்கூட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வனப்பகுதியை ஒட்டி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு அமைந்துள்ளதால், அங்கு வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில், குழந்தைகளை வெளியில் தனியாக செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கூடாது. சிறுத்தைக்கு பிடித்தமான வளர்ப்பு பிராணிகள் வீடுகளில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.
