/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் மீது மோதி ஒர்க் ஷாப் உரிமையாளர் பலி
/
பஸ் மீது மோதி ஒர்க் ஷாப் உரிமையாளர் பலி
ADDED : ஏப் 26, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:அன்னுாரில் நின்று கொண்டிருந்த பஸ் மீது ஸ்கூட்டர் மோதியதில் ஒருவர் பலியானார்.
ஆயிமாபுதூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் பால்ராஜ், 58. ஜீவா நகரில் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். கடந்த 23ம் தேதி மாலை அன்னுாரில் இருந்து கோவை ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருநதார்.
அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்ஸின் பின்புறம் பால்ராஜ் சென்ற ஸ்கூட்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பால்ராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

