/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின விழா
/
அரசு மருத்துவமனையில் உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின விழா
அரசு மருத்துவமனையில் உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின விழா
அரசு மருத்துவமனையில் உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின விழா
ADDED : ஜூன் 16, 2024 11:35 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக ரத்த தான தன்னார்வலர்கள் தின விழா நடந்தது. நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் நடராஜ் வரவேற்றார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, அதிக முறை ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கும் மற்றும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்த கல்லுாரிகள் மற்றும் சேவை அமைப்புகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கினார்.
ரத்த தானம் ஏன் செய்ய வேண்டும், ரத்த தானம் எவ்வளவு சிறப்பானது; ரத்ததான தன்னார்வலர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என செவிலியர் சண்முகப்பிரியா பேசினார்.
இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சரவண பிரகாஷ், செவிலியர் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து நன்றி கூறினார்.
முன்னதாக காலையில், பொள்ளாச்சி மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் அனைவரும் ரத்ததானம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ரத்ததானம் பற்றியும், ரத்த அணுக்கள் பற்றிய பல புதிய தகவல்கள் டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் கருத்தரங்கு நடந்தது.
தொடர்ந்து, அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி லட்சுமி ஜூவல்லரி சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர்கள், ஊழியர்கள் பங்கேற்று, 32 யூனிட் ரத்த தானம் பெற்றனர்.