/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலகத்தரத்தில் வேலைவாய்ப்பு பயிற்சிகள்
/
உலகத்தரத்தில் வேலைவாய்ப்பு பயிற்சிகள்
ADDED : மார் 22, 2024 08:40 PM
ஈச்சனாரியில், கற்பகம் உயர்கல்வி நிறுவனம், முப்பது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமை வளாகமாக அமைந்துள்ளது.1995ம் ஆண்டு கற்பகம் அறக்கட்டளையின் கீழ், கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது.
சிறந்த கல்விச்சேவையால், தன்னாட்சி அதிகாரமும் பெற்ற இக்கல்லுாரி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்ற பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ், கடந்த 2008ம் ஆண்டு முதல், தேசிய நிகர்நிலைப்பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றது.
அத்துடன், 2021ம் ஆண்டு பல்கலைக்கழகத் தரமதிப்பீட்டுக்குழுவின் A+ சான்றினையும் பெற்று, இந்தியப் பல்கலைகள் வரிசையில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.
இந்நிகர்நிலைப் பல்கலையில், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புலம், பொறியியல் புலம், மருந்தியல் புலம், கட்டட வடிவமைப்பியல் புலம் என நான்கு புலங்கள் அமைந்துள்ளன.
இன்றைய தொழில்நுட்பத்திற்குத் தேவையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு பட்டப் படிப்புகளில் அவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. உலகத் தரத்திலான வேலைவாய்ப்புப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில் மிக அதிகமான மாணவர்களை பட்டப்படிப்பு முடியும் முன்பே வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தந்த முதன்மையான நிகர்நிலைப் பல்கலையாக திகழ்கிறது.
உலகளாவிய கல்வியை மாணவர்கள் பெறும் வகையில், 52க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பல்கலையோடு ஒப்பந்தம் போடப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

