/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரு ராகவேந்திரர் சுவாமி கோவிலில் ஆராதனை
/
குரு ராகவேந்திரர் சுவாமி கோவிலில் ஆராதனை
ADDED : ஆக 22, 2024 02:22 AM

மேட்டுப்பாளையம் : காரமடை ஜெய மாருதி குரு ராகவேந்திரர் கோவிலில், 353ம் ஆண்டு ஆராதனை நடந்தது.
காரமடையில் கோவை சாலையில் ஜெய மாருதி, குரு ராகவேந்திரர் கோவில்கள் உள்ளன. இங்கு ராகவேந்திரர் சுவாமிக்கு, 353ம் ஆண்டு ஆராதனை நடந்தது.
காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மங்கள இசையுடன் வைபவம் துவங்கியது. தொடர்ந்து சுப்ரபாதமும், பின் பால், தயிர், தேன், நெய், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய திரவியங்களால் ராகவேந்திரருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
அதன் பின் அலங்கார பூஜையும், ஸ்தோத்திரப் பாராயணம், மலர் அர்ச்சனை, மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தன. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.