/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அலகு குத்தி பறவை காவடி வழிபாடு
/
அலகு குத்தி பறவை காவடி வழிபாடு
ADDED : மார் 04, 2025 10:19 PM

மாரியம்மன் கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அலகுகுத்தி பூவோடு எடுக்கும் விழா நடக்கிறது. மார்க்கெட் ரோட்டில் துவங்கும் இந்த விழாவை காண ஊரே திரண்டு வரும்.
அம்மனிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், நிறைவேறியதும் அலகு குத்தி பூவோடு எடுப்பது ஊரில் வழக்கமான ஒன்றாக உள்ளது.
உடலை வருத்தி அலகு குத்தி, பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி எடுத்து வித விதமான அலங்கார வளைவுகளில் அமர்ந்தும், ரதத்தில் தொங்கியபடி கிரேன் உதவியுடன் ஊர்வலமாக வருவர்.
இது மட்டுமின்றி, அலகு குத்தி ஊர்வலமாக வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் செல்வர். அலகு குத்தி வருவோரிடம், பெண்கள், தங்களது குழந்தைகளை கொடுத்து வணங்கு கின்றனர். ஒரு சிலர், அவர்களிடம் விபூதியை வாங்கி குழந்தைகள் நெற்றியில் வைத்து வழிபடுகின்றனர். குழந்தைகளின் பயம் போக்கவும், ஆரோக்கியம் காக்கவும் இவ்வாறு வழிபடுகின்றனர்.
திருவிழா துவங்கப்பட்டவுடன், பூவோடு நிகழ்ச்சியும் துவங்குகிறது. இரண்டாவது நாள், இந்த அலகு குத்தி பூவோடு நடத்தப்படுகிறது. கடந்த, 38 ஆண்டுகளாக இந்த அலகு குத்தும் விழா கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் திடலில் இருந்து வெங்கட்ரமணன் வீதி, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, தாலுகா அலுவலகம் என முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.
வெள்ளித்தேரோட்டத்துக்கு முன்பாக, இந்த விழாவை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஊர்வலம் செல்லும் வழியெங்கும் மக்கள் வெள்ளமாக கூடி நின்றி ஆரவாரம் செய்து, அம்மனை வழிபடுவர்.
நடப்பாண்டு, வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள், 'மாரியம்மன் திருவிழாவில் இதுபோன்ற நிகழ்வு பிரம்மிக்க வைக்கிறது. முதல் முறையாக அலகு குத்தி பூவோடு எடுத்து வீதி உலா செல்வதை காணும் போது, அம்மன் அருளை உணர முடிகிறது. விழாவை காண கிடைத்தது மன மகிழ்ச்சியை அளிக்கிறது,' என்றனர்.