/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூசாரிகளுக்கு இன்று வழிபாட்டு பயிற்சி முகாம்
/
பூசாரிகளுக்கு இன்று வழிபாட்டு பயிற்சி முகாம்
ADDED : மே 04, 2024 11:39 PM
கோவை;கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பில், 11வது கோவில் வழிபாட்டு பயிற்சி முகாம் கோவையை அடுத்த அரசூரில் இன்று துவங்கி 17ம் தேதி வரை நடக்கிறது.
இப்பயிற்சியில் சேர தமிழகத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த இளைய தலை முறை மாணவர்கள் சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள் இன்றி கோவில் பூசாரிகள் நல சங்கம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்து சமயத்தில் உள்ள சைவம், வைணவம், கவுமாரம், காணபத்யம், சாக்தம், சவுரம்ஆகிய ஆறு தெய்வ வழிபாடுகள் பற்றிநன்கு பயிற்சி பெற்றவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உணவு, தங்குமிடம், பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி நிறைவு செய்பவர்கள் குடமுழுக்குவிழா, புதுமனை புகுவிழா, மஞ்சள்நீராட்டு, கால்கோள்விழா உள்ளிட்ட சுபகாரியங்களில் பங்கேற்கலாம். பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இன்று காலை 10:00 மணிக்கு கோவை அரசூர் தங்கநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடக்கிறது.