/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகாசன பயிற்சி யால் நினைவாற்றல் பெருகும்
/
யோகாசன பயிற்சி யால் நினைவாற்றல் பெருகும்
ADDED : ஜூன் 25, 2024 01:55 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் சர்வதேச யோக தின விழா நடத்தப்பட்டது. ஹயக்கிரீவா நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை, கல்லுாரி முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஈஷா யோகா மைய ஆசிரியர் நவீன்மதிராஜ் கலந்து கொண்டார். தொடர்ந்து, மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பல்வேறு ஆசனங்களை செய்து, யோகா பயிற்சி அளித்தார்.
யோகா பயிற்சியால், மனமும், உடலும் வலிமையடையும், நினைவாற்றல் பெருகும். எண்ண சிதறல்கள் தடுக்கப்படும். அதனால், தினமும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும், என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குணப்பிரியன் செய்திருந்தார்.