/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பேர் புரோ -2024' கண்காட்சியில் வீடு வாங்க 'அச்சாரம்' போடலாம்!
/
'பேர் புரோ -2024' கண்காட்சியில் வீடு வாங்க 'அச்சாரம்' போடலாம்!
'பேர் புரோ -2024' கண்காட்சியில் வீடு வாங்க 'அச்சாரம்' போடலாம்!
'பேர் புரோ -2024' கண்காட்சியில் வீடு வாங்க 'அச்சாரம்' போடலாம்!
ADDED : ஆக 03, 2024 09:56 PM

கோவை : கோவையில் வசிக்கும் மக்களின் வீட்டு கனவை நனவாக்கும் வகையில், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சார்பில், 'பேர் புரோ - 2024' கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், நேற்றுமுன்தினம் துவங்கியது.
தங்களுக்கு ஏதுவாக இருக்கும் வீடுகள், அதன் விலை, அதிலிருக்கும் வசதிகள் குறித்து, அரங்கில் இருந்தவர்களிடம் ஆர்வமாக விசாரித்தனர்.
பெயர் பெற்ற கட்டுமான நிறுவனங்கள், ஒரே இடத்தில் தங்களின் பங்களிப்பை வழங்கியதால், பொதுமக்களுக்கு மிகுந்த உபயோகமாக இருந்தது.
'விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்' வாயிலாக, 360 டிகிரி கோணத்தில், தாங்கள் தேர்ந்தெடுக்க உள்ள வீட்டின் அமைப்பு, அறைகள் ஆகியவற்றை, எங்கிருந்தாலும் அறிந்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த வசதி, பார்வையாளர்களை கவர்ந்தது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த கண்காட்சியில், ஏராளமானோருக்கு கடன் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. வீட்டுமனையோ, வீடோ வாங்க நினைப்பவர்கள், இன்று நடக்கும் இறுதி நாள் கண்காட்சிக்கு, காலையிலேயே செல்வது சிறப்பானதாக இருக்கும்.