ADDED : ஆக 06, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
தபால் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்காக பர்சனலைஸ்டு பாஸ்புக் வசதியை தபால் துறை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கணக்கு எண் மற்றும் தபால் துறையின் ஐ.எப்.எஸ்.சி.,ஆகியவை, காசோலையில் முன்பே அச்சிடப்பட்டிருக்கும்.
அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் பர்சனலைஸ்டு பெற்றுக்கொள்ளலாம் என தபால்துறை அறிவித்திருந்தது. பலர் அது சிரமம் என கூறியதால், இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக ஆன்லைனில் பர்சனலைஸ்டு செக் புக் கோரும் வசதியை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தபால் நிலையத்துக்கு நேரில் வர அவசியமில்லை. இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
