/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
/
அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 09, 2024 11:25 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வரும், 20ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வாயிலாக கடந்த, 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் வரும், 20ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லுாரிகளுக்கு வரும், 24ம் தேதி அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள்) வரும், 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடக்கிறது.
முதல் பொது கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல், 15ம் தேதி வரையும், இரண்டாம் பொது கலந்தாய்வு, ஜூன் 24ம் தேதி முதல், 29ம் தேதி வரையிலும் நடக்கிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம் தேதி துவங்கப்பட உள்ளது. இத்தகவலை கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.