/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி பெறலாம்
/
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி பெறலாம்
ADDED : மார் 12, 2025 11:31 PM
கோவை; அன்னுார் கரியாம்பாளையம் செல்வநாயகி திருமண மண்டபத்தில், வரும் 26ம் தேதியன்று நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில், கலெக்டர் பவன்குமார் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார்.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
அன்னுார் கரியாம்பாளையம் செல்வநாயகி திருமண மண்டபத்தில் வரும் 26 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
அதில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்டு, வரும் 14 காலை 11:00 மணிக்கு, அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், கோவை வருவாய் கோட்டாட்சியர் வடக்கு அலுவலகத்திலும், அன்னுார் தாசில்தார் அலுவலகத்திலும், கரியாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மனுக்களை பெற உள்ளனர். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுக்கலாம்.
மனுக்களை, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை செய்து, வரும் 26ல் நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாவட்டம் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.