/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் அலுவலரை தாக்கிய இளைஞர் கைது
/
தபால் அலுவலரை தாக்கிய இளைஞர் கைது
ADDED : செப் 07, 2024 02:47 AM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே தேரம்பாளையத்தில், தபால் நிலைய உதவி கிளை அதிகாரியை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி, 26. இவர் காரமடை பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட தேரம்பாளையம் தபால் நிலையத்தில், உதவி கிளை தபால் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
தேரம்பாளையத்தை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன், 27. இவரது வீட்டிற்கு கனிமொழி தபால் எடுத்து சென்றார்.
அப்போது, முரளி கிருஷ்ணன், கனிமொழியை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் உள்ளார். மேலும், இனி தபால் எடுத்து வந்தால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, கனிமொழி அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் முரளி கிருஷ்ணனை கைது செய்தனர்.---