ADDED : மே 13, 2026 06:14 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தொழிலாளியை கொலை செய்த வாலிபரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, கோட்டூர் நெல்லித்துறை ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,56. கூலித்தொழிலாளி. இவரது மகன் தமிழ்செல்வனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்,29, என்பவரது மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதில், ஆனந்தின் மனைவியை தமிழ்செல்வன் அழைத்துக்கு கொண்டு ஊரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், தமிழ்செல்வன் குடும்பத்தினர் மீது ஆனந்த் கோபமாக இருந்துள்ளார். அடிக்கடி பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆனந்த், நெல்லித்துறை சாலையில் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து கீழே தள்ளி விட்டார். பாலகிருஷ்ணனுக்கு பின்னந்தலையில் அடிபட்டது.
படுகாயமடைந்த அவர், கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். கோட்டூர் போலீசார், ஆனந்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
