/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்ற இளைஞர் கைது; 1 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கஞ்சா விற்ற இளைஞர் கைது; 1 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஆக 04, 2024 10:32 PM
மேட்டுப்பாளையம் : காரமடையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை குளத்துப்பாளையம் குளம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக, நேற்று முன்தினம் காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில், நின்றிருந்த இளைஞரை, பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததார். இதையடுத்து அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர்.
விசாரணையில், அவர் காரமடை -- சிறுமுகை சாலையில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்த பூபதி, 23, கூலித் தொழிலாளி என தெரியவந்தது. மேலும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
----