ADDED : மார் 29, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரவீனா, 34. இவர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில், சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் பிரவீனா அணிந் திருந்த 4.5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் நகையை பறித்து சென்றவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா, 21 மற்றும் அரவிந்தன், 20 என தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் சூர்யாவை கைது செய்து 4.5 பவுன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். தலைமறைவான அரவிந்தனை தேடி வருகின்றனர்.
---

