/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
/
இளைஞர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, இளைஞர் மன்ற நிர்வாகிகள் அன்னுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நல்லிசெட்டிபாளையம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், அன்னுார் பயணியர் மாளிகை முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மன்றத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனிச்சாமி, சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசே நீட் தேர்வை ரத்து செய். பிளஸ் டூ மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.