/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது
/
யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது
ADDED : ஜூலை 18, 2024 11:21 PM
கோவை;தேசிய அளவிலான லீக் போட்டியில் பங்கேற்கும் அணிக்கான தேர்வு வரும், 21ம் தேதி வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளியில் நடக்கிறது.
அத்யாயனா சர்வதேச பள்ளி மற்றும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் இணைந்து ஏ அண்ட் என் என்ற கால்பந்து பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். ஏ அண்ட் என் சார்பில் தேசிய யூத் லீக் போட்டிகளில் பங்கேற்க அணி தயார் செய்யப்படுகிறது.
அணிக்காக தேர்வு வரும், 21ம் தேதி காலை 6:30 மணி முதல் வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், 13, 15, 17 ஆகிய வயது பிரிவுகளில் அடிப்படையில் தேர்வு நடக்கவுள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 63791 30919, 96269 09152 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.