/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்: அண்ணாமலை
/
லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்: அண்ணாமலை
லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்: அண்ணாமலை
லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்: அண்ணாமலை
UPDATED : ஜூலை 23, 2024 05:13 AM
ADDED : ஜூலை 23, 2024 12:08 AM

பெ.நா.பாளையம்;லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் முன் வர வேண்டுமென, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
துடியலூரில், தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில், முப்பெரும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசுகையில், மக்களுக்கு நல்ல காற்று, தண்ணீர், பாதுகாப்பு தருவதே நல்ல சமுதாயம். இத்தகைய சமுதாயம் உருவாக்க பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இலக்குகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாடும் வீடும், நலம் பெறும்.
நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற நிலை சமுதாயத்தில் உருவானால், நாட்டில் உள்ள பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். லஞ்சத்துக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும். காந்தி, காமராஜ் போன்ற நல்ல தலைவர்களை கண்ட நாடு நமது நாடு. அவர்களுடைய தியாகங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். நல்ல மாற்றங்கள் மக்களிடமிருந்து உருவாக வேண்டும்.
ஹையர் கூட்ஸ்களுக்கான ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஹையர் கூட்ஸ் அமைப்பினரை, அமைப்புசாரா தொழிலாளர்களுடன் இணைத்து இன்சூரன்ஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.