ADDED : மே 14, 2024 12:11 AM

அன்னுார்:'ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்' தொடர்பாக வேளாண் மாணவியர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டம் அன்னுாரில், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் 11 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அன்னுார் அருகே வடவள்ளி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 'ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்' தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து வேளாண் மாணவியர்கள் கூறுகையில், 'ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்பது ரசாயனமற்ற உயிர் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதாகும். பிரம்மாஸ்திரா, நீமாஸ்திரா, அக்னியஸ்திரா போன்ற உயிர் பூச்சிக்கொல்லிகளை தயார் செய்வது தொடர்பான, செயல்பாட்டு விளக்க முறைகளை விவசாயிகளுக்கு செய்துகாட்டி, விரிவாக அதன் பயன்களை எடுத்துரைத்தோம்,' என்றனர்.
