/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல அளவிலான கேரம் போட்டி; பாலிடெக்னிக் மாணவியர் அசத்தல்
/
மண்டல அளவிலான கேரம் போட்டி; பாலிடெக்னிக் மாணவியர் அசத்தல்
மண்டல அளவிலான கேரம் போட்டி; பாலிடெக்னிக் மாணவியர் அசத்தல்
மண்டல அளவிலான கேரம் போட்டி; பாலிடெக்னிக் மாணவியர் அசத்தல்
ADDED : ஆக 29, 2024 10:49 PM

கோவை: ஐ.பி.ஏ.ஏ., கேரம் போட்டியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணியினர் அபாரமாக விளையாடி முதல் பரிசை தட்டிசென்றனர்.
பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன்(ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில் மண்டல அளவிலான மாணவியருக்கான கேரம் போட்டி நேற்று நடந்தது. 11 அணிகள் பங்கேற்ற இப்போட்டியை, கல்லுாரியின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறை தலைவர் பிருந்தா துவக்கி வைத்தார்.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இதில், 2-1 என்ற செட் கணக்கில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடத்தை தட்டி சென்றது.
தொடர்ந்து, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், அவிநாசி ரோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இதில், 2-0 என்ற செட் கணக்கில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியை, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி வென்று மூன்றாம் இடம் பிடித்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் கிரிராஜ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.