/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக.,1க்குள் வீடு காலி செய்ய உத்தரவு :அதிர்ச்சியில் ஆயுதப்படை போலீசார்
/
ஆக.,1க்குள் வீடு காலி செய்ய உத்தரவு :அதிர்ச்சியில் ஆயுதப்படை போலீசார்
ஆக.,1க்குள் வீடு காலி செய்ய உத்தரவு :அதிர்ச்சியில் ஆயுதப்படை போலீசார்
ஆக.,1க்குள் வீடு காலி செய்ய உத்தரவு :அதிர்ச்சியில் ஆயுதப்படை போலீசார்
ADDED : ஜூலை 25, 2011 09:45 PM
கோவை : கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் குடியிருக்கும் 109 வீடுகளை வரும் ஆக.,1க்குள் காலி செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளதால், போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.போலீஸ் குடியிருப்பு கட்டும் திட்டத் தில், 2010 -2011ம் ஆண்டு தமிழகத்தில் 2,000 வீடுகள் கட்டப்படும் என, தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதிக் கழகம் கடந்த ஆண்டு அறிவித்தது.
இதில், கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 160 புதிய வீடுகள் கட்டப்படும் என்றும், இதற்காக 109 மிகப் பழமையான ஓட்டு வீடுகள், கான்கிரீட் குடியிருப்புகள் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புது வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பால், போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர். இச்சூழலில், எவ்வித மாற்று ஏற் பாடும் செய்து தராமல், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என அதிரடி கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை வளாகத்தில் குடியிருக் கும் 109 போலீஸ்காரர்களுக்கும் நேற்று முன்தினம் இந்த உத்தரவு வழங்கப் பட்டது. உத்தரவில், 'மாநகர போலீஸ் கமிஷனரிடம் இருந்து இதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதால்,இந்த நோட்டீஸ் கிடைத்தவுடன் ஆக.,1க்கு முன்பாக வீட்டை காலி செய்து, மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் அலுவலகத் தில் சாவியை ஒப்படைக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற போலீசார் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 'மாற்று ஏற்பாடு செய்யப்படாத நிலையில், வெளியில் அதிக வாடகை கொடுத்து வீடு பிடிக்க முடியாது. 'பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் அதிக தூரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என கவலை தெரிவித்தனர்.இந்த அதிரடி உத்தரவால் அதிர்ச்சி அடைந்துள்ள போலீசார், தங்கள் குடும்பத்தினருடன் மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரியை சந்தித்து, முறையிட முடிவு செய்துள்ளனர்.