/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை மக்களுக்கு வசதியாக கூடுதலாக 10 'டிரிப்' பஸ் இயக்கம்
/
வால்பாறை மக்களுக்கு வசதியாக கூடுதலாக 10 'டிரிப்' பஸ் இயக்கம்
வால்பாறை மக்களுக்கு வசதியாக கூடுதலாக 10 'டிரிப்' பஸ் இயக்கம்
வால்பாறை மக்களுக்கு வசதியாக கூடுதலாக 10 'டிரிப்' பஸ் இயக்கம்
ADDED : டிச 25, 2024 08:18 PM

பொள்ளாச்சி; தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊரான வால்பாறைக்கு மக்கள் செல்லும் வகையில், கூடுதலாக, 10 டிரிப் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
வால்பாறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள பலரும், உயர்கல்வி மற்றும் பணி நிமித்தமாக, பிற மாவட்டங்களில் தங்கி உள்ளனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், சொந்த ஊரான வால்பாறைக்கு சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவ்வகையில், பொள்ளாச்சி - வால்பாறை இடையே குறிப்பிட்ட நேர இடைவெளியில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டும் வருகின்றன. நேற்று, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை ஒட்டி, பிற பகுதிகளில் உள்ள மக்கள், சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.
பஸ் ஸ்டாண்டினுள் பஸ் வரும்போதே, முண்டியடித்து ஏறவும், ஜன்னல் வழியே 'சீட்' பிடிக்க முற்பட்டனர்.
வழக்கமாக, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு அரசு பஸ்கள், 40 'டிரிப்' இயக்கப்படும் நிலையில், கூட்டம் காரணமாக, நேற்றுமுன்தினம், கூடுதலாக 10 'டிரிப்' இயக்கப்பட்டது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வால்பாறை செல்லும் பயணியர் கூட்டத்தைப் பொறுத்து, பஸ்களின் இயக்கம் அதிகப்படுத்தப்படும். அதன்படி, நேற்றுமுன்தினம், 50 'டிரிப்' இயக்கப்பட்டது. பயணியர் பாதுகாப்பாக பஸ்சில் ஏறிச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்,' என்றனர்.