ADDED : ஜன 07, 2025 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே விளாமரத்தூர் செல்லும் சாலையில், பவானி ஆற்றுப்பாலத்திற்கு அடுத்தபடியாக நெல்லித்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், நேற்று சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று வந்தது. இதை பார்த்த அங்குள்ளோர் அதிர்ச்சி அடைந்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், இணைந்து அந்த மலைப்பாம்பை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

