/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் கழிவறையில் மறைத்து கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா
/
ரயில் கழிவறையில் மறைத்து கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா
ரயில் கழிவறையில் மறைத்து கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா
ரயில் கழிவறையில் மறைத்து கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா
ADDED : ஜன 20, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ரயில் கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.
கோவை ரயில்வே போலீசார், நேற்று முன்தினம் கோவை ரயில்வே ஸ்டேஷனில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ரயில்களில் வரும் பொருட்களை ஆய்வு செய்தனர்.
அப்போது பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில், சோதனை நடத்தினர்.
அதில், ரயிலின் கழிவறையில் ஐந்து பண்டல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டனர்.
அவற்றை சோதனை செய்தபோது அதில், 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடக்கிறது.