/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 10, 2025 09:46 PM

மேட்டுப்பாளையம்; ஊராட்சிகளில் வழங்கப்படும் 100 நாள் வேலையை, 200 நாளாக உயர்த்தியும், தின ஊதியத்தை, 700 ஆக வழங்க கோரியும், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சுப்பம்மாள் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் தங்கவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி, அன்னுார் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டப் பணிக்கு, ஆண்டுக்கு 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை அட்டை அனைவருக்கும் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை, 200 நாளாக உயர்த்தியும், தின ஊதியத்தை, 700 ஆக வழங்க வேண்டும்.
பிரதமர் வீடு கட்டும் திட்டம் கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றை, 400 சதுர அடியில் கட்டிக் கொடுக்கவும், வீடு கட்ட தலா 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழக விவசாய சங்க நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் பணியாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.