/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்கள் கடித்து 100 நாட்டு கோழிகள் பலி
/
தெரு நாய்கள் கடித்து 100 நாட்டு கோழிகள் பலி
ADDED : செப் 04, 2025 11:09 PM
கருமத்தம்பட்டி; எலச்சிபாளையத்தில், கோழிப்பண்ணைக்குள் புகுந்த தெரு நாய்கள் கடித்து, 100 க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் பலியாகின.
கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் பால சண்முகம். ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பண்ணை அமைத்து, 1000 த்துக்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது, கோழிப்பண்ணைக்குள், 10 க்கும் மேற்பட்ட நாய்கள் புகுந்து, நாட்டு கோழிகளை கடித்து குதறி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் உள்ளவர்களின் உதவியுடன் நாய்களை துரத்தியுள்ளார். பண்ணைக்குள் சென்று பார்த்தபோது, 100 க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்து கிடந்தன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை கடிக்கின்றன. மான்களையும் கடித்து கொல்கின்றன. நகராட்சி நிர்வாகம், தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.