ADDED : ஏப் 11, 2026 08:05 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நடனம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக, பொதுமக்களிடம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வுக்காக ராட்சத பலுானை பறக்க விட்டு, 'என் ஓட்டு, என் உரிமை' என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நடன நிகழ்ச்சி வாயிலாக, ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
அனைவரும் ஓட்டு அளிக்க வேண்டும்; ஜனநாயக கடமை ஆற்றுவது தலையாய கடமையாகும். இதை உணர்ந்து நாம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
