/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பெண்கள் கலை கல்லுாரியில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு
/
அரசு பெண்கள் கலை கல்லுாரியில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு
அரசு பெண்கள் கலை கல்லுாரியில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு
அரசு பெண்கள் கலை கல்லுாரியில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு
ADDED : மே 29, 2025 11:55 PM
கோவை; புலியகுளம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரியில், 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில், மொத்தம், 176 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் கடந்த, 7ம் தேதி துவங்கியது. கடந்த, 27 ம் தேதி நிறைவடைந்தது.
கோவை புலியகுளத்தில் உள்ள அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், மொத்தம், 410 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர மாணவியர் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இப்படிப்புகளில் சேர, 10 ஆயிரத்து, 723 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தரவரிசைப்பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, வரும், 2 மற்றும், 3 ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. கவுன்சிலிங், காலை 9:00 மணி முதல் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.