/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., மினி மராத்தான் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
/
கே.பி.ஆர்., மினி மராத்தான் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
கே.பி.ஆர்., மினி மராத்தான் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
கே.பி.ஆர்., மினி மராத்தான் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
ADDED : டிச 23, 2024 04:28 AM

கோவை போதைப் பொருள் இல்லா எதிர்காலத்திற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், கே.பி.ஆர்., மினி மராத்தான் போட்டி நடந்தது.
இரண்டு, ஐந்து மற்றும் எட்டு கி.மீ., என மூன்று பிரிவுகளில், 8வது கே.பி.ஆர்., மினி மராத்தான் போட்டி நடந்தது. கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி, கே.பி.ஆர்., கல்லூரி முகப்பு என மூன்று இடங்களில் துவங்கி, கே.பி.ஆர்., கல்லுாரியின் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.
இதில் கே.பி.ஆர்., நிறுவனத்தின் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பெண் பணியாளர்கள் உட்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், இந்திய தடகள வீராங்கனை அபிநயா மற்றும் தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் கணபதி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கல்லுாரி செயலர் காயத்ரி, முதல்வர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.