/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குன்னத்துார் புதுாரில் 100வது ஆண்டு அன்னதான விழா
/
குன்னத்துார் புதுாரில் 100வது ஆண்டு அன்னதான விழா
ADDED : அக் 17, 2024 11:28 PM
அன்னுார்: குன்னத்தூர்புதூரில் நூறாவது ஆண்டாக அன்னதான விழா நாளை துவங்குகிறது.
குன்னத்தூர் புதூரில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி, உடன் உறையும் நாராயணமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஆஞ்சநேயர், ராஜ கணபதி, விஷ்ணு மற்றும் துர்க்கை சன்னதிகள் உள்ளன.
இக்கோவிலில் நூறாவது ஆண்டாக இந்த ஆண்டு அன்னதான விழா நடக்கிறது. இன்று காலை 7:00 மணிக்கு மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு 100வது ஆண்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட நினைவு நுழைவு வாயில் திறப்பு விழா நடைபெறுகிறது. இன்று மதியம் அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. மாலையில் புலவர் கணேசன் பேசுகிறார். இரவு நாட்டிய பள்ளி மாணவியரின் நாட்டியம் நடக்கிறது.
நாளை காலை 8:00 மணிக்கு, 108 தீர்த்த குடங்களால், பூதேவி ஸ்ரீதேவி சமேதர நாராயண மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 9:00 மணிக்கு குருக்கம்பாளையம் மாகாளியம்மன் குழுவின் பஜனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு நாராயண மூர்த்தி சேஷ வாகனத்தில் உலா வருகிறார். இரவு 9:00 மணிக்கு பஜனை நடக்கிறது.
வரும் 20ம் தேதி காலை 11:00 மணிக்கு மேஜிக் ஷோ நடக்கிறது. மாலையில் விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தாசபளஞ்சிக ராமானுஜ பக்தஜன சங்கத்தினர் செய்து வருகின்றனர்.