/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
101 மணி நேரம் தொடர்ந்து பாடும் சாதனை நிகழ்ச்சி துவக்கம்
/
101 மணி நேரம் தொடர்ந்து பாடும் சாதனை நிகழ்ச்சி துவக்கம்
101 மணி நேரம் தொடர்ந்து பாடும் சாதனை நிகழ்ச்சி துவக்கம்
101 மணி நேரம் தொடர்ந்து பாடும் சாதனை நிகழ்ச்சி துவக்கம்
ADDED : மே 01, 2025 04:43 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் சாய் கலாசேத்ரா சார்பில், இசை வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த கலாசேத்ரா சார்பில் தொடர்ந்து, 101 மணி நேரம், இடைவிடாது பாடல்களை பாடும் இசை நிகழ்ச்சி நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சிக்கு பாட்டு ஆசிரியை வீணாபாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பிரேமா குத்து விளக்கு ஏற்றி, சாதனை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆசிரியர் ஆனந்த் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திருவண்ணாமலை பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் வரவேற்றார்.
இந்த சாதனை இசை நிகழ்ச்சியில், 66 மாணவ, மாணவியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், முதியோர் பங்கேற்று, 101 மணி நேரம் இடைவிடாது பாடல்களை பாடஉள்ளனர்.
வருகிற, 4ம் தேதி மாலை நடைபெறும் நிறைவு விழாவில், பின்னணி பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கலாசேத்ரா நிர்வாகி பாலசுப்பிரமணியன் செய்து வருகிறார்.