/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
103 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
103 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : நவ 25, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., இளவேந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் செட்டிபாளையம் -- பல்லடம் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். ராஜஸ்தானை சேர்ந்த கேவாராம், 34, தனராம், 25 என்பதும், மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்கள். 103 கிலோ இருப்பதும் தெரிந்தது. புகையிலை பொருட்கள், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

