ADDED : நவ 25, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுந்தராபுரம் சிட்கோ, பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சுந்தராபுரம் சிட்கோவை சேர்ந்த அஜித், 28 என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்திச் செல்வதும் தெரிந்து கைது செய்தனர்., அவரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

