ADDED : அக் 27, 2025 11:55 PM

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை வட்டார இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய கடிதம் எழுதும் போட்டி நடந்தது.
'எனது வழிகாட்டிக்குக் கடிதம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 1,051 மாணவர்கள் பங்கேற்றனர்.
டிஜிட்டல் உலகில், இளம் தலைமுறையினரிடம் கையால் எழுதும் தகவல் தொடர்புக் கலையை மீண்டும் உயிர்ப்பிப்பதையும், தனிப்பட்ட கடிதங்கள் வாயிலாக தங்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் மேம்படுத்த ஊக்குவிப்பதையும், நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது.
பல்கலை மாணவர் நல முதன்மையர் ராமலிங்கம், அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கட சுப்ரமணியன், லாலி ரோடு அஞ்சலக அதிகாரி பிரவீணா, பேராசிரியர் தங்கராஜ், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல்காளை உட்பட பலர் பங்கேற்றனர்.

