/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
108 விநாயகர் சிலைகள் சோமனுாரில் பிரதிஷ்டை
/
108 விநாயகர் சிலைகள் சோமனுாரில் பிரதிஷ்டை
ADDED : ஆக 20, 2025 09:36 PM
சூலுார்; சூலுார் மற்றும் சோமனூர் சுற்று வட்டார பகுதிகளில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
நாடு முழுவதும் வரும், ஆக., 27 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஹிந்து முன்னணி சார்பில், சூலுார் மற்றும் சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சிலைகள் அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், சூலுாரில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலும், சோமனூரில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையிலும் நடந்தது.
விழா ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு மற்றும் ஊர்வல பாதைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் பேசுகையில், 'இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை, 'நம்ம சாமி; நம்ம கோவில்; நாமே பாதுகாப்போம்' என்ற கருப்பொருளில் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், 29 ம்தேதி சூலுார், சோமனூரில் விசர்ஜன விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.
கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும், என்றார்.