/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் 108 திருவிளக்கு பூஜை
/
காரமடையில் 108 திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 29, 2025 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடையை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில், 25ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
தொப்பம்பட்டி தனுஷ் ராமச்சந்திரன் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தார். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு உட்பட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சென்னிவீரம்பாளையம் ஹிந்து முன்னணி கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.