/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம் படம்: சிவகுருநாதன்
/
108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம் படம்: சிவகுருநாதன்
108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம் படம்: சிவகுருநாதன்
108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம் படம்: சிவகுருநாதன்
ADDED : ஜன 31, 2026 06:51 AM
கோவை, கடந்த, 2008 ம் ஆண்டு 108 சேவைத்திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தமிழக மருத்துவ சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஓட்டுநனர்கள், குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாநில அளவில் நேற்று நடந்த கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில், 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அவரச ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி கூறுகையில், '' 108 சேவைத்திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். 2025ல் ஊதிய உயர்வு 16 சதவீதத்தில் இருந்து 10 ஆக குறைத்து வழங்கியுள்ளனர். குறைக்கப்பட்ட ஊதிய உயர்வை உடனடியாக வழங்கவேண்டும். விடுமுறை எடுக்க முடியாமலும், 12 மணி நேர வேலை, என பல்வேறு சிக்கலில் தவிக்கின்றோம். இப்பிரச்னைகளுக்கு அரசு உடனடி தீர்வுகாணவேண்டும்'' என்றார்.
மாநில பொருளாளர் கணேசன், மகளிரணி நிர்வாகி நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

