/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரக்கருத்துகள் குறித்த 10வது மாநாடு
/
தரக்கருத்துகள் குறித்த 10வது மாநாடு
ADDED : செப் 30, 2025 10:59 PM

கோவை; இந்திய தர வட்ட மன்றம் (க்யூ.சி.எப்.ஐ.,) கோவை கிளை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனம்சார்பில், தரக்கருத்துகள் குறித்த 10வது மாநாடு நடந்தது.
இந்திய தர வட்ட மன்ற இயக்குனர் யோகேஸ்வரி, கோவை கிளை தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், 5 எஸ், கைசன், குவாலிட்டி சர்க்கிள்ஸ், 6 சிக்மா, டி.பி.எம்., மற்றும் பல்துறை சார்ந்த முறைகள் குறித்த நிகழ்வாய்வுகள் இடம்பெற்றன. 56 நிறுவனங்களைச் சேர்ந்த 630 பிரதிநிதிகளை கொண்ட 157 அணிகள், தங்கள் ஆய்வுகளை முன்வைத்தன.
ஆய்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, செயல்திறனின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.
பேராசிரியர் சண்முகம், புரொபல் இண்டஸ்ட்ரீஸ் ஜே.எம்.டி., வெங்கடேஷ்,கோயம்புத்துார் கிளையின் முன்னாள் தலைவர் மோஹனசுந்தரி, யுனைடெட் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் அப்துல் ரவுப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.