/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்
/
10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்
10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்
10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்
ADDED : மே 21, 2025 12:16 AM

கோவை,; 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள், மே 16ம் தேதி வெளியானது. இதையடுத்து, மாணவர்கள் மேல்நிலை படிப்புகளுக்கு சேரும் வகையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று (மே 20) முதல், அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேல்நிலைப் படிப்புக்கு, விண்ணப்பிக்க மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அவசியமாக இருப்பதால், பள்ளிக் கல்வித் துறை, இந்ததற்காலிக சான்றிதழ்களை, மே 19ம் தேதி முதல் வழங்க உத்தரவிட்டது.
அதன்படி, கோவையில் ராஜ வீதி துணி வனிகர் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிப்பெண் பட்டியல் பள்ளிகள் வழியாக வழங்கப்படுகிறது. மாணவர்கள், தங்களது மதிப்பெண்களை கல்வித் துறை இணையதளம் வாயிலாகவும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.