/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தம் நிறைவு
/
10ம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தம் நிறைவு
10ம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தம் நிறைவு
10ம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தம் நிறைவு
ADDED : ஜூலை 21, 2025 10:21 PM
-- நமது நிருபர் -
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இந்த தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக, மாநில அளவில் 3 மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி, கோவையில் உள்ள விமல் ஜோதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடைத்தாள் திருத்தும் பணி 4 நாட்கள் நடைபெற்றது. இதில், 700 முதல் 800 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், '10க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார், 30 ஆயிரம் விடைத்தாள்கள் இம்மையத்தில் திருத்தப்பட்டன.
விடைத்தாள் திருத்திய அடிப்படையில் பார்த்தால், இந்த துணைத்தேர்வில் சுமார் 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. மதிப்பெண்கள் பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்தவுடன், வரும் வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது,' என்றனர்.