/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீதிமன்றங்களுக்கு 11 நாள் விடுமுறை
/
நீதிமன்றங்களுக்கு 11 நாள் விடுமுறை
ADDED : டிச 24, 2024 11:26 PM
கோவை; கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நீதிமன்றங்களுக்கு வரும் ஜன., 1 வரை விடுமுறை அளித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை மற்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு மற்றும் முன்சிப் கோர்ட்களுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, கோவையில் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், முன்சிப் கோர்ட்கள் உட்பட, 20க்கு மேற்பட்ட கோர்ட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், விசாரணை நடைபெறவில்லை. ஆனால், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல பணிக்கு வந்திருந்தனர்.
மாஜிஸ்திரேட் கோர்ட்கள், சிறப்பு நீதிமன்றங்களில், வழக்கம் போல விசாரணை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் தினமான இன்றுமட்டும், இந்நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

