ADDED : அக் 20, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ரெட்டியாரூரை சேர்ந்த யுவராஜ் தோட்டத்தில், 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.
இதை கண்ட யுவராஜ், வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், இரண்டு மணி நேரம் போராடி லாவகமாக பாம்பினை பிடித்தனர். பின்னர், ஆழியாறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
