/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.11 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை
/
ரூ.11 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை
ADDED : செப் 21, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கோவை, குனியமுத்தூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 44. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
அங்கிருந்து திரும்பியவர் கடந்த, 2020ல் தனது உறவினரான சாய்பாபா காலனியை சேர்ந்த மணிமாறன் என்பவர் மூலம் தொழில் துவங்க,
கோவைபுதூரை சேர்ந்த சரவணன், 43, என்பவரிடம், 12 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
ஆனால் தொழில் துவங்காமல் காலம் தாழ்த்தினர். சதீஷ்குமார் பணத்தை திரும்ப கேட்டார். ஒரு லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்தனர்.
மீதி 11 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தனர். சதீஷ்குமார் புகாரில், குனியமுத்தூர் போலீசார் மணிமாறன், சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.