/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் 11 பேர் சாட்சியம்
/
மாணவி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் 11 பேர் சாட்சியம்
மாணவி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் 11 பேர் சாட்சியம்
மாணவி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் 11 பேர் சாட்சியம்
ADDED : பிப் 07, 2026 06:37 AM
கோவை: பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்தாண்டு நவ. 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்டதாக சதீஷ்,30, கார்த்திக்,21, குணா,20, ஆகியோரை காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது, கோவை மகளிர் கோர்ட்டில், 270 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 112 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். மூவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் ஆண் நண்பர் சாட்சியம் அளித்து இருந்தனர்.
நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். மற்ற இருவரும் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஆஜர்படுத்தவில்லை.
அதை தொடர்ந்து, சாட்சி விசாரணை நடந்தது. நேற்று ஒரே நாளில் 11 பேரிடம்சாட்சியம் பெறப்பட்டது. இன்றும் சாட்சி விசாரணை நடக்கிறது.

